சென்னை, ரேசன் கடையில் பொருட்கள் வாங்க அசல் ரேசன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் ப.வெங்கடரமணன் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1,495 கடைகள் இயங்கி வருகிறது. இதற்கு, அடுத்தபடியாகச் சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. ரேஷன் பொருள் வாங்க, அந்த கடைக்கு தான் போக வேண்டும் என்று இல்லை. அருகில் இருக்கும் எந்த கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். சிலர் கடை வரை வந்து, ரேஷன் கார்டு மறந்து விட்டோம் என்று சென்று விடுகின்றனர். கார்டு soft copy இருந்தால் போதும், அட்டை நம்பர் இருந்தால் கூட போதும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் மற்றும் வாடகை வீடு மாறிச் செல்பவர்களுக்கு அரசின் இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், எந்தக் கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்ற இந்த வசதி குறித்து இன்னும் பலருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சட்டப்பேரவையின் வாயிலாக இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/card-is-not-required-to-buy-ration-items-minister-venkataramanan-announced




