சென்னை, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக முதல்-அமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பால் உற்பத்தியை நம்பி வாழும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டு களாக உயர்த்தப்படாமல் இருந்த பால் கொள்முதல் விலை தற்போதைய அறிவிப்பின் மூலம் பெரிதும் ஏமாற்றத்தையும், பாதிப்பையும் அளிக்க கூடியதாக உள்ளது. தீவனம் விலை உயர்வு, கூலி உயர்வு என உற்பத்தி செலவு உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை வெறும் ரூ.1 மட்டும் உயர்த்தியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் கறவை மாடுகளின் நிலையை கருத்தில் கொண்டு பாலின் கொழுப்பு சத்து 4 சதவீதமாகவும், இதர சத்து 8 சத வீதம் அடிப்படையிலும் விலையை நிர்ணயம் செய்ய வேண் டும். கூட்டுறவு சங்கங்கள் நல்லமுறையில் இயங்க 5 சதவீதம் மார்ஜின் தொகை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆவின் பால் பற்றாக்குறையை சரி செய்ய வெளிமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் வாங்கி பாலுடன் கலந்து விற்பனை செய்யும் நிலையை போக்கி பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடரில் பசும் பால் லிட்டருக்கு ரூ.50-ம், எருமை பால் லிட்டருக்கு ரூ.60-ம் வழங்க வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்துவோம் என்று தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stop-supplying-milk-to-aavin-tamil-nadu-farmers-association-announces



