திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலாங்காயம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வருபவர் ராமகிருஷ்ணன். ரூ. 5 ஆயிரம் லஞ்சம் இவர் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க வாகன உரிமையாளரிடம் இன்று ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். அப்போது அங்கு விரைந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-police-officer-arrested-for-accepting-a-bribe-of-rs-5000




