சைதாப்பேட்டை 2 மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததற்காக தாய் திட்டிய வருத்தத்தில், 5-ம் வகுப்பு மாணவி அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜசேகர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் புகழினி (வயது 9). மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி புகழினி அறிவியல் தேர்வில் 15-க்கு 13 மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி தேர்வுத்தாளில் தனது தாயாரிடம் கையெழுத்து வாங்க சென்றார். 2 மதிப்பெண்கள் அப்போது அவரது தாயார் 2 மதிப்பெண்கள் ஏன் குறைந்தன? என்று கேட்டதுடன் தேர்வுத்தாளில் கையெழுத்திட மறுத்து, தந்தையிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. தந்தையிடம் கையெழுத்து கேட்டால் திட்டுவார் என நினைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் சிறுமி மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் நேற்று இரவு வீட்டில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் சென்று கதவை சாத்திய சிறுமி வெகுநேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த தாயார் கதவை தட்டியபோது உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று மாணவி புகழினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-over-2-marks-5th-grade-girl-takes-shocking-step




