சென்னை, காஞ்சீபுரம் பிள்ளை யார் பாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி. முதல் 12 -ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிள்ள்ளையார்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மின்தடை காரணமாக இந்த தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர். பள்ளிக்கு விடுமுறை எனினும்பள்ளி விடு முறை என்பது தெரியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு இன்று காலை ஏராளமான மாணவ-மாணவிகள் வந்த னர். பின்னர் மின்தடை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டதை அறிந்து சிரமத்துடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர். இதுக்குறித்து பொது மக்கள் கூறுகையில், மின் தடை காரணமாக வாட்ஸ் அப் செயலி மூலம் குறுஞ் செய்தி காலை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூரில் இருந்து வரும் மாணவர்களைவிட வெளி யூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் விடுமுறை விடப்பட்டது தெரியாமல் வந்தனர். மின்தடை காரண மாக பள்ளிக்கு விடுமுறை விடுவது இதுதான் முதல் முறை என்றனர். அறிவிக்கப்படாத மின் வெட்டு நேற்று இரவு காஞ்சீபுரம் நகரின் பல்வேறு திடீரென மின்வெட்டு திடீரென ஏற்பட்டது. குறிப்பாக பெரிய காஞ்சீபுரம், பிள் ளையார்பாளையம், பல்லவர்மேடு,தாயார் குளம், ஹசிங் போர்டு, ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு, பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெரு, ஒபி.குளம் தெரு, மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு, பல்லவர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் மின்சாரமின்றி பொது மக்கள் தவித்தனர். புழுக்கத்தால் அவதிப் பட்ட அவர்கள் காற்றுக்காக வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தனர். இதனால் தூக்கம் இன்றி தவித்தனர். இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதை தடுக்க அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபால் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/school-closed-due-to-power-outage-in-kanchipuram




