சனா சவுதி அரேபியாவின் சீன தயாரிப்பு டிரோனை சுட்டு வீழ்த்தி விட்டோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஏற்பட்ட மோதல், தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் ராணுவ தளங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், ஈரானுக்கு எதிரான தளங்களை தாக்கும் பணியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் உள்ளிட்ட நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கப்பட்டு, அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். சவுதி மீது தாக்குதல் இதன்பின்னர், மெக்காவின் தெற்கே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டும், டிரோன்களை கொண்டும் தாக்குதல் நடத்தினர் என தகவல் வெளியானது. இதனால், மக்களிடையே பரவலாக அச்சம் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு சவுதி அரசு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டு கொண்டது. எனினும், டிரோன்களையும், ஏவுகணைகளையும் சவுதி அரேபிய படையினர், நடு வழியிலேயே சுட்டு வீழ்த்தி விட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின்னர் சவுதி அரசு மக்களுக்கு விடுத்திருந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டது. மத்திய கிழக்கில் போர் துவங்கியது முதல் இதுவரை முதன்முறையாக மெக்கா நகரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்பட்டது. ஹவுதி மறுப்பு எனினும், மெக்காவை நாங்கள் குறி வைக்கவில்லை. மெக்கா நகர் மீது தாக்குதல் நடத்தவில்லை என ஹவுதி அமைப்பினர் மறுத்துள்ளனர். நாங்கள் சவுதி ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என தெரிவித்தது. கடந்த வாரத்தில் சவுதியின் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் நடந்ததில் அவை எரிந்து சேதமடைந்தன. இதில் 73 பேர் காயமடைந்தனர். இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில், ஏமன் நாட்டில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று கூறும்போது, சவுதி அரேபியா நாட்டினுடைய விங் லூங் 2 என்ற ஆயுதம் ஏந்திய டிரோன் ஒன்றை நாங்கள் தாக்கி அழித்தோம். டிரோன் முறியடிப்பு தைஜ் கவர்னரக பகுதியில் மொச்சா என்ற இடத்தில் நடந்த அதிரடி நடவடிக்கையின்போது இந்த டிரோன் முறியடிப்பு நடந்தது என்று தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் யாஹியா சரீ கூறும்போது, சவுதி எதிரி படைகளை சேர்ந்த விங் லூங் 2 டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது என கூறினார். இது சீனாவின் விமான போக்குவரத்து கழகத்தின் தயாரிப்பு என கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/we-shot-down-saudi-arabias-chinese-made-drone-houthi-rebels




