டெல்லியில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி (NATIONAL LAW UNIVERSITY) சட்டம் சம்பந்தப்பட்ட உலக புகழ் பெற்ற சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. சட்டக் கல்வி மூலமாக சட்டம் அதை சார்ந்த விழுமியங்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், சட்ட ஒழுங்குகளை பாதுகாத்து இந்திய அரசியலமைப்பின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தவும் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சட்ட அறிவை மேம்படுத்தி அதை இந்திய அளவில் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த பல்கலைக்கழகம் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளையும் அது தொடர்பான தாக்கங்களையும் வகுப்பாய்வு செய்து மக்கள் நலனுக்காக இயங்கி வருகிறது. சட்டப்படிப்புகள் இங்கு பல்வேறு சட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவை பற்றிய முக்கிய விவரங்கள்: 1. பி. ஏ.எல் எ.ல்.பி (ஹானர்ஸ்) (B.A.L.L.B.(Hons) இந்தப் படிப்பில் சேர அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில்ALL INDIA LAW ENTRANCE TEST)(AILET) வெற்றி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் -2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.பிளஸ் -2 தேர்வில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இருந்தபோதும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் (OTHER BACKWARD CLASSES)(OBC) 42 சதவீத மதிப்பெண்களும்,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் (SC/ST/PWD) ஆகியோர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும். பிளஸ் -2 படித்துக்கொண்டிருப்பவர்களும் இந்த தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், இந்த நுழைவு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, விண்ணப்பதாரர்கள் பிளஸ் -2 தேர்வில் வெற்றி பெற்று தேவையான தகுதி மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் பிளஸ் -2 தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாத நிலை ஏற்பட்டால், அந்த விண்ணப்பதாரர் இந்தப் படிப்பில் சேர தகுதி இல்லாதவர் என கருதப்படுவார். 2. எல். எல்.எம் (ஓராண்டு படிப்பு) (L.L.M(ONE YEAR) PROGRAMME. இந்தப் படிப்பில் சேர அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில்ALL INDIA LAW ENTRANCE TEST)(AILET) வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல். எல். பி (L.L.B) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு சமமான பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (SC/ST/PWD) ஆகியோர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும். இந்த நுழைவு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு தேர்வில் வெற்றி பெற்று தேவையான தகுதி மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், பட்டப் படிப்புக்கான தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாத நிலை ஏற்பட்டால், அந்த விண்ணப்பதாரர் இந்தப் படிப்பில் சேர தகுதி இல்லாதவர் என கருதப்படுவார். 3. எல்.எல். எம் இன் டிஜிட்டல் டெக்னாலஜி,பாலிசி & கவர்னன்ஸ் (L.L.M.IN DEGITAL TECHNOLOGY,POLICY &GOVERNANCE). இந்த படிப்பு,நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் (NETHAJI SUBASH UNIVERSITY OF TECHNOLOGY) இணைந்து நடத்தப்படுகிறது. குறிப்பாக -டிஜிட்டல் தொழில்நுட்பம், கொள்கை மற்றும் நிர்வாகத்தில் போதிய பயிற்சி ஆகியவை இந்த படிப்பில் வழங்கப்படுகிறது. மேலும் சட்டக் கல்வியோடு இணைந்த இணைய பாதுகாப்பு ( CYBER SECURITY) தொடர்பான டிஜிட்டல் நிர்வாக யுக்திகளிலும் போதிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த படிப்பில் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள்,துறை சார்ந்த பல்வேறு வல்லுநர்கள்,தொழில் நிபுணர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பு, பணி புரியும் வல்லுனர்களுக்கும் ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய கற்பித்தல் முறையோடு, பல்வேறு துறை சார்ந்த பாடங்களும் நடைமுறை பயிற்சிகளோடு கற்றலின் அடித்தளமாக இந்த படிப்பில் அமைக்கப்பட்டுள்ளது 4. ஐ பி- ஜாயிண்ட் மாஸ்டர்ஸ்/எல் எல் எம். (I P-JOINT MASTERS/L.L.M) இதனை, IP கூட்டு முதுகலை என அழைப்பார்கள். அதாவது, அறிவு சார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டம் (M.A) ஆகிய இரண்டு முதுகலை பட்டங்களை இந்த படிப்பு வழங்குகிறது. பிளஸ் -2 படித்த பின்பு தொடர்புடைய துறையில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டத்திற்கு இணையான ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம் மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எல்.எல்.பி (L.L.B)அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இந்தப் படிப்பில் சேர,அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில்ALL INDIA LAW ENTRANCE TEST)(AILET) வெற்றி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் இந்த நுழைவு தேர்வு எழுதலாம். இருந்த போதும், நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் போது கண்டிப்பாக விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 5. பி. ஜி.ஐ.பி- (எம்.ஏ /எல். எல்.எம்) (PGIP -M.A/L.L.M). PGIP -MA/LLM (திவால் நிலைச் சட்டம்) (INSOLVANCY) என்னும் இந்த படிப்பில் சேர கீழ்க்கண்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நிறுவனச் செயலாளர் (COMPANY SECRETARY), பட்டய கணக்காளர் (CHARTERED ACCOUNTANTANCY), செலவு கணக்காளர்( COST ACVOUNTANCY) ( அல்லது) சட்டம் சார்ந்த தொழில் முறை தகுதி அல்லது பட்டம் (அல்லது) தொழில்நுட்பம்( TECHNOLOGY), ( அல்லது) பொறியியல் (ENGINEERING ) துறையில் இளங்கலை பட்டம் (அல்லது) பொருளாதாரம், நிதி, வணிகம், மேலாண்மை (அல்லது )திவால் நிலை சட்டம் (INSOLVANCY ) ஆகிய ஏதேனும் ஒரு பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றிருந்தால் போதும். பட்டப் படிப்பில் கண்டிப்பாக 50 சதவீத மதிப்பெண்கள் குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பு சம்பந்தப்பட்ட விளம்பரம் வெளியிடப்படும் தேதியில் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28க்குள்இருக்க வேண்டும். இந்த படிப்பில் சேர கண்டிப்பாக டெல்லி தேசிய பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம் ஆகும். தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குழு விவாதம்,நேர்காணல் ஆகியவற்றின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நுழைவுத் தேர்வு “நேஷனல் லா யுனிவர்சிட்டி” (NATIONAL LAW UNIVERSITY) நடத்தும் நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு பெரும்பாலும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் அதாவது, மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பு நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். குறிப்பாக, 2027 ஆம் ஆண்டு இந்த நுழைவு தேர்வு எழுத விரும்புபவர்கள், 2026 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பை கவனித்து விண்ணப்பிக்க வேண்டும். நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த நுழைவு தேர்வு பொதுவாக டிசம்பர் மாதம் நடைபெறும். நுழைவுத் தேர்வு அமைப்பு நுழைவுத் தேர்வு ஆஃப்லைன் (OFFLINE) எனப்படும் "பேனா மற்றும் தாழ் முறை" யில் நடத்தப்படும். "ஆல் இந்தியா லா என்ட்ரன்ஸ் டெஸ்ட் ஃபார் போஸ்ட் கிராஜுவேட் லா ப்ரோக்ராம்ஸ் "(ALL INDIA LAW ENTRANCE TEST FOR POST GRADUATE LAW PROGRAMMES)(AILET PG) என அழைக்கப்படும் இந்த தேர்வு எல். எல்.எம். (LLM) என அழைக்கப்படும் "மாஸ்டர் ஆஃப் லாஸ் '(MASTER OF LAWS) என்னும் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம். இந்த தேர்வு இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. பிரிவு A: ஆங்கில மொழி மற்றும் சட்ட ரீதியான பகுத்தறிவு (LOGICAL REASONING) சார்ந்த 50 கொள் குறி வகை வினாக்கள் (MULTIPLE CHOICE QUESTIONS)கொண்டதாக அமையும். மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு இந்த பகுதியில் கேள்விகள் இடம் பெறும். தவறான விடைகளுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரிவு B. சட்டம் சம்பந்தப்பட்ட இரண்டு விரிவான விடையளிக்கும் கேள்விகள் இந்த பிரிவில் இடம் பெறும். மொத்தம் 75 மதிப்பெண்கள் இந்த பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு முதல் 10 கேள்விகள் கொண்ட கேள்வி தாளில் இருந்து ஏதேனும் இரண்டு கேள்விகளை தேர்ந்தெடுத்து பதில் எழுத வேண்டும். மேலும் விவரங்களுக்கு. இந்த பல்கலைக்கழகம் மற்றும் தேர்வு பற்றிய விரிவான விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/education-and-employment/national-law-university-nlu-courses-and-entrance-exam-preparation-full-details




