பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவியேற்ற ஸ்டார்மர் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் கடந்த ஜூன் 22-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராகவும் பிரதமராகவும் 56 வயதான ஆன்டி பர்ன்ஹாம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கெய்ர் ஸ்டார்மர் மன்னர் சார்லஸை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதையடுத்து புதிய அரசை அமைக்குமாறு மன்னர் சார்லஸ் விடுத்த அழைப்பை பர்ன்ஹாம் முறைப்படி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவியேற்றுக் கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/two-individuals-of-indian-origin-sworn-in-as-british-ministers




