சென்னை, சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் ஆஜராகி வந்துள்ளனர். அரசு பணி இந்தநிலையில், கரூர் நெரிசலில் இறந்த 41 பேரது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. சி.பி.ஐ. விசாரணை இந்த நிகழ்ச்சியினால் சி.பி.ஐ. விசாரணை நீர்த்துப்போய் விடும். சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாற வாய்ப்புள்ளது. எனவே, சி.பி.ஐ., விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கக்கூடாது அரசுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-seeking-to-stay-the-provision-of-government-jobs-to-the-families-of-the-deceased-in-karur-hearing-soon




