விஷ்ணு விஷாலுக்கு ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொகுசு காரை பரிசளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால். கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இவர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இயக்கியுள்ளார். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதல் பாகத்தை போல படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கே கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்திருந்தனர். செல்லாவு அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் 3 நாள்களில் ரூ.22 கோடிக்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும்நிலையில், இதுவரை ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு காரையும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் படக்குழுவினருக்கு 40 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கினார். An Event of gratitude! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/gatta-kusthi-2-film-success-producer-car-gift-to-vishnu-vishal




