இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: ஆகஸ்ட் 4-ந் தேதி (செவ்வாய்) * சஷ்டி விரதம். * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன், சக்தி அழைப்பு விழா. * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு. * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம். * திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. * சமநோக்கு நாள். 5-ந் தேதி (புதன்) * மேல்மருவத்தூர், நயினார் கோவில், திருவானைக்காவல், காளையார்கோவில், திருப்பாதிரிப்புலியூர், ராமேஸ்வரம் தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம். * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா. * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் விழா தொடக்கம். * சமநோக்கு நாள். 6-ந் தேதி (வியாழன்) * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம். * நயினார்கோவில் அன்னை சவுந்திரநாயகி பல்லாங்குழி ஆடிவரும் காட்சி. * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க காமதேனு வாகனத்தில் பவனி. * கீழ்நோக்கு நாள். 7-ந் தேதி (வெள்ளி) * கார்த்திகை விரதம். * இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம். * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி. * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் உலா. * கீழ்நோக்கு நாள். 8-ந் தேதி (சனி) * மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு. * இருக்கன்குடி மாரியம்மன் பவனி. * சமநோக்கு நாள். 9-ந் தேதி (ஞாயிறு) * சர்வ ஏகாதசி. * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்ப வெள்ளி விமானத்தில் பவனி. * நயினார்கோவில் சவுந்திரநாயகி, வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம். * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி. * சமநோக்கு நாள். 10-ந் தேதி (திங்கள்) * பிரதோஷம். * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம். * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்தில் பவனி. * மேல்நோக்கு நாள்.‘ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-4th-august-2026-to-10th-august-2026




