ஈரோடு, சமூக நீதித்துறை சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களை தொழில்முனைவோராக்கும் நோக்கில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தாட்கோ தொழிற்பேட்டைகளில் புதியதாக தொழில் தொடங்க அறிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். தொழிற்கூடங்கள் குத்தகை இது தொடர்பாக, சமூக நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களை தொழில்முனைவோராக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டம், ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் பயனாளிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்தொழிற்பேட்டைகளில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் புனரமைக்கும் பணிகளும் ரூ.115 கோடி மதிப்பீட்டில் ஆயத்தநிலை தொழிற்கூடங்கள் (Plug & Play Industrial Sheds) அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று முடிவுரும் தருவாயில் உள்ளது. மேலும், ஈங்கூர் மற்றும் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் முதற்கட்டமாக தலா 50,000 சதுர அடி பரப்பளவில் நவீன ஆயத்தநிலை தொழிற்கூடங்கள் (Plug & Play Industrial Sheds) அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று பணிகள் நிறைவுபெற உள்ளது. ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு வாய்ப்பு இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலி மனையாகவோ, அல்லது ஆயத்தநிலை தொழிற்கூடங்களாவோ (plug & play) அமைத்து அவர்களின் தேவைக்கேற்ப நீண்டகால குத்தகை மற்றும் வாடகை முறையில் பயனாளிகளுக்கு வழங்க அரசு முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு ஏதுவாக மேற்கண்ட ஏதேனும் ஒரு முறையில் தொழிற்கூடங்களை பெற்று பயன்பெற தாட்கோ இணையதளத்தில் ( பதிவுசெய்து, கூடுதல் விபரங்களுக்கு கைப்பேசி எண்ணில் 91502 77736(அ)73581 25780 தொடர்பு கொள்ளுமாறு தாட்கோ மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ் கேட்டுக்கொள்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-opportunity-for-adi-dravidars-and-tribal-people-wishing-to-start-a-business




