சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய். உற்சாக வரவேற்பு தமிழகத்திற்கு முதலீட்டர்களை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக லண்டன் செல்ல சென்னை விமானநிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தும் கைகூப்பியும் மக்களது வரவேற்பை பெற்றுக்கொண்டார். நெஞ்சில் குடியிருக்கும்! தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக லண்டன் செல்ல சென்னை விமானநிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி ஹெர்டின் சைகையை காட்டினார். அஜித்தை சந்திக்கும் விஜய் செப்டம்பர் 12ம் தேதி லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்முதல்-அமைச்சர் விஜய். மேலும் கார் ரேஸ் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்தை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்கிறார். முதல்-அமைச்சர் பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பு ஏற்று 100 நாட்களுக்குள் முதலீட்டாளர் மாநாடு வாயிலாக 1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 8491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்வைத்துள்ளன. இதனால் 5,690 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக தமிழகத்தில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் மம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மின்னணு சாதனங்கள் ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது முதல்வர் விஜயின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதனால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகர திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களை சிறப்பாகவும், வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்வதுடன், மோட்டர்ர ஸ்போர்ட்ஸ் விளையாட்டுஉள்கட்டமைப்பு விளையாட்டு சுற்றுலாமற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகன தொழில்கள் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-leaves-for-england




