ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தி சிவன் கோவிலில் நடைபெறும் பவித்ரோற்சவத்தின் இரண்டாம் நாளில் மூலவர் சன்னதிகள் உள்பட பல்வேறு சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தென் கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தி தினந்தோறும் ஆகம விதிகளின்படி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வழக்கமாக கோவிலில் நடைபெறும் தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக, தெரிந்தோ, தெரியாமலோ செய்யப்படும் தவறுகளால் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. முதல் நாளில் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சிலந்தி, பாம்பு, யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ மூர்த்திகளுக்கு பால், பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மாலையில் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக உற்சவமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பவித்ர மாலைகள் சமர்ப்பணம் பவித்ரோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று கோவில் வளாகத்தில் வடகிழக்கு மூலையில் சுவாமிநாதன் குருக்கள் வழிகாட்டுதல் கீழ் யாகசாலை அமைத்து, கலச ஸ்தாபனம், ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் பவித்ர மாலைகளை கொண்டு வந்து பூஜை செய்தனர். தொடர்ந்து மூலவர் சன்னதிகள் உள்பட பல்வேறு சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சுவாமிநாதன், கருணாகர் குருக்கள், புரோகிதர் அர்த்தகிரிசுவாமி அறங்காவலர் குழு தலைவர் கொட்டே.சாய் பிரசாத், செயல் அலுவலர் வெங்கடேசுலு, துணை செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி, கோவில் ஆய்வாளர் வெங்கடசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/srikalahasti-shiva-temple-pavithrotsavam-pavitra-malas-samarpanam




