சென்னை, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ சென்னையில் இரண்டாம் கட்டமாக 116 கி.மீ. தூரத்துக்கு மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பணிமனை, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 53 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கின. விமான நிலையத்திட்டம் ரத்து தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெட்ரோ ரெயில் திட்டத்தின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை 28 கி.மீ. தூரத்துக்கு ரூ.8,779 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-changes-in-metro-rail-project-as-well




