நெல்லை, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில், புதன்கிழமை (ஆக. 12) ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி, மாவட்டநிர்வாகம், உள்ளாட்சித் துறை, வனத்துறை, இந்து சமய அறநிலை துறை ஆகியவை சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, பயணிகள், பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், பாதுகாப்புக் கருதியும் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் ஆக. 7, 8 ஆகிய இரண்டு நாள்கள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஆக. 7) பாபநாசம் வனச் சோதனைச் சாவடி மூடப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிகளில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தங்களது வாகனங்களில் கோயிலுக்குச் செல்லலாம். ஆக. 10 முதல் 13 ஆம் தேதி வரை தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அகஸ்தியர்பட்டியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமே செல்லலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/aadi-amavasai-devotees-flock-to-sorimuthu-ayyanar-temple




