மதுரை, மீனாட்சியம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை தொடங்கி வைத்தார். மதியம் அவுட்போஸ்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய் மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். கோரிப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண், ஜடாமுனி கோவில் தெரு வழியாக மீனாட்சி அம்மன்கோவில் கிழக்கு நுழைவு வாயிலை அடைந்தார் அதனை தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அறங்காவலர் குழுத் தலைவரும், பி.டி.ஆர்பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி அம்மாள் வரவேற்பு அளித்தார். அண்மையில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மீனாட்சி அம்மன் கோவில் புதுபொலிவுடன் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய் பொற்றாமரை குளம், அம்மன், சுவாமி சன்னதி பிரகாரங்கள், புதிதாக புனரமைக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் அம்மனுக்கு 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பூஜையின்போதும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு பூஜையிலும் தரிசனம் செய்யும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இன்று மாலை கோவிலுக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய் 4.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தார். இந்த பூஜையின்போது பஞ்ச தசி வடிவத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பார். அப்போது அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 30 நிமிடம் அம்மன், சுவாமி சொக்கநாதர் சன்னதிகளில் முதல்-அமைச்சர் விஜய் வழிபட்டார். கோவிலுக்கு வந்த அவருக்கு அண்மையில் புதிதாக அசாமில் இருந்து வாங்கி வந்த துர்கா என்ற யானை மூலம் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சருடன் புஸ்சி ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் உடன் சென்றனர். முதல்-அமைச்சர் விஜய் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு இருந்து ஆர்ப்பரித்தனர். விஜய் வருகையால் மதுரை நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-sami-visits-meenakshi-amman-temple-in-madurai




