அருள்நிதியின் ‘அருள்வான்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, தகராறு, வீர சிவாஜி, தேன் படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயக். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருள்வான்’. ரம்யா பாண்டியன், காளிவெங்கட், ஆரவ், கிருத்திகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியான 'தகராறு' படத்திற்குப் பிறகு, அருள்நிதி மற்றும் கணேஷ் விநாயகம் இந்த படத்தின் மூலமாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. ‘90 பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் அனைத்தும் ரிறைவடைந்துள்ளது. ‘அருள்வான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாளது. ‘அல்லிபூவே’ பாடலை யுகபாரதி வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார். இந்நிலையில், ‘அருள்வான்’ படத்தின் டிரெய்லரை நடிகர சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/arulnidhis-arulvaan-film-trailer-released-by-suriya




