இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்ததால் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் புறநகர் ரெயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.மும்பை மற்றும் தானே பகுதிகளில் மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் நேற்றும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. அந்தேரி, குர்லா, சகிநகா, செம்பூர், சாந்தாக்ரூஸ், போவாய் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தானே, பால்கர் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/normal-life-disrupted-in-mumbai-due-to-heavy-rains-red-alert-issued-for-tomorrow-as-well




