திருப்பூர், 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் இல்லாமல் பஞ்சலிங்க அருவி வறண்டு கிடக்கிறது. பஞ்சலிங்க அருவி திருமூர்த்திமலையின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள் ளது. இந்த அருவிக்கு குலிப்பட்டி, குருமலை ஆகிய பகுதிகளில் உற்பத் தியாகும் ஆறுகள், சிற்றோடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது. இந்த அருவியில் தண்ணீர் விழும்போது நறுமணம் கமழும். இதற்காகவே இந்த அருவியில் குளிக்க மக்கள் படையெடுத்து வருவது வழக்கம். பொதுவாக திருமூர்த்திமலையில் உருவாகிய சிற்றோடைகள் வற்றாது. இதனால் ஆண்டு முழுவதும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் தென்மேற்கு பருவமழை கைவிட்டது. இதனால் அணைக ளுக்கு நீர்வரத்து குறைந்தது. அணைகளில் நீர்மட்டமும் வேகமாக சரிகிறது. அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். குடிப்பதற்கு கூடபாட்டில் களில் தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. வெறிச்சோடி காணப்படும் அருவி தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அருவி யில் நீர்வரத்து இருந்தால் இந்த விடுமுறை நாட்களில் மாணவ-மாணவி கள் ஏராளமானோர் குவிந்து இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அருவியில் நீண்ட நாட்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப் பது இதுவே முதல் முறையாகும். இதனால் வடகிழக்கு பருவமழை கைக்கொடுக்குமா? அருவிக்கு நீர் வரத்து ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் நிலவுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/panchalingam-falls-lies-parched-and-dry-after-10-years




