அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து க்கு இடையேயான கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா. அட்லான கால்பந்து மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து வெற்றியின் பாதையை நோக்கி களமிறங்கியது. ஆனால் அவர்களின் நோக்கத்தை அர்ஜெண்டினா தவிடு பொடியாக்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த கோல்களும் இல்லாத நிலையில், இரு அணிகளும் இரண்டாம் பாதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர். இங்கிலாந்து அணியின் கார்டன், ஆட்டத்தின் சமநிலையை உடைத்தார். 55-வது நிமிடத்தில் மோர்கன் ரோஜர்ஸ் மிகத் துல்லியமாக வழங்கிய கிராஸ் பந்தை, கார்டன் கோலாக மாற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 85 ஆவது நிமிடம் வரை தோல்வியின் பிடியில் இருந்தது அர்ஜென்டினா,தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் கோலுக்கு வழிவகுத்தார் லியோனல் மெஸ்ஸி. அதை லாங் ஷாட் மூலம் கோலாக மாற்றினார் என்சோ பெர்னாண்டஸ் (1-1). ஆட்டம் சமநிலையில் இருந்தபோது, இரு அணிகளும் தீவிரமாக பந்த கோலாக்கும் முயற்சியில் இருந்தார்கள். பின் அடுத்த ஏழு நிமிடங்களிலேயே மெஸ்ஸி மீண்டும் ஒரு கோலுக்கு வழிவகுத்ததன் மூலம் அதை மார்டினெஸ் அதை தலையால் முட்டி கோலாக்கினார்(2-1). இந்த கோலே அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா இன்னும் அதிக கோல்களை அடித்திருக்க முடியும். அலெக்சிஸ் மெக் அலிஸ்டரின் இரண்டு கோல் முயற்சிகளும் கோல் கம்பத்தில் பட்டு அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இங்கிலாந்தின் கோல் கீப்பரான ஜோர்டான் பிக்ஃபோர்டு சிறப்பாகக் செயல்பட்டு சில கோல்களை தடுத்தார். இங்கிலாந்துக்கு அது கொஞ்சம் ஆறுதல். இந்த உலகக்கோப்பை தொடரில் நடந்த 11 ஆட்டங்களிலும் மெஸ்ஸி ஒரு கோல் மற்றும் கோலுக்கான வழிவகை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் இளம் புயலை எதிர்கொள்கிறார் லியோனல் மெஸ்ஸி. வெல்லப்போவது ஸ்பெயினின் நிதானமா? இல்லை அர்ஜென்டினாவின் திட்டமிட்டு குழப்பும் தந்திரமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://sports.vikatan.com/football/fifa-2026-argentina-to-world-cup-final




