அபுதாபி, எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் நிலவின் மேல்பரப்பில் மோதியது. இந்த நிகழ்வை அமீரகத்தின் வானியல் மையம் கண்காணித்து எடுத்த புகைப்படம் தூசிப்படலம் காரணமாக தெளிவில்லாமல் உள்ளது. இதுகுறித்து அபுதாபி வானியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நிலவின் மேல் பயங்கரமாக மோதியது கடந்த 2025-ம் ஆண்டு பயர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் நிலவு பயண லேண் டர் வாகனங்களை ஸ்பேஸ்-எக்ஸ் என்ற எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் சுமந்து சென்றது. அதன் பிறகு நிலவுக்கான லேண்டர்களை அதன் பாதைக்கு சேர்த்தபிறகு புவி மற்றும் நிலவு ஈர்ப்பு விசை காரணமாக நீண்ட சுற்றுப்பாதையில் வந்து கொண்டு இருந் தது. அந்த ஆண்டின் ஜனவரியில் விண்வெளிக்கு சென்ற ராக்கெட்டின் 2-ம் கட்ட பாகம் தொடர்ந்து அங்கேயே மிதந்து கொண்டு இருந்தது. சுமார் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள, ஒரு பஸ் அளவு பருமன் கொண்ட இந்த ராக்கெட் பாகமானது மணிக்கு 8 ஆயிரத்து 690 கி.மீ. வேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் நிலவை நோக்கி சென்றது. அதில் அமீரக நேரப்படி நேற்று காலை 10.30 மணியளவில் நிலவின் மீது மோதும் என அபுதாபி அல் கதம் வானியல் மையம் கணக்கிட்டது. அதேபோல் சரியாக அதேநேரத்தில் நிலவின் மேல் விளிம்பில் உள்ள ஐன்ஸ்டீன் கிரேட்டர் என்ற பகுதியில் பயங் கரமாக மோதியது. இந்த மோதல் திட்டமிடப்படாத ஒன்று என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மோதல் புகைப்படங்கள் நிலவில் ராக்கெட் மோதும் நிகழ்வை அபுதாபி அல் கதம் வானியல் மையம் தொடர்ந்து கண் காணித்து வந்தது. பகலில் வெளிச்சம் மற்றும் நிலவு அடிவானத்தில் மிக குறைந்த உயரத் தில் இருந்ததாலும், வெளிமண்டல ஒளி விலகல் காரணமாக புகைப்படம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. மோதல் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் முதன்மை தொலைநோக்கி மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் மோதலின்போது பெரும் புழுதி காரணமாக அதன் வெடிப்பு மற்றும் வெளிச்சத்தை பதிவு செய்ய முடியவில்லை. தூசிப்படலம் அதிகமாக வானில் இருந்ததால் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியவில்லை. அப்போது நிலவின் நிலப்பரப்பை ராக்கெட் மோதும்போது சுமார் 1.100 டன் எடையுள்ள நிலவு பாறைகள் மற்றும் மண் தூசியாக விண்ணில் கிளம்பி இருக்கலாம் என கருதப்படு கிறது. நிலவின் குறைந்த புவியீர்ப்பு விசை காரணமாக இந்த தூசிகள் சுமார் 10 அடி உயரம் வரை மேலே எழும்பி இருக்கலாம் என தெரிகிறது. உலகம் முழுவதிலும் இதன் மோதல் புகைப்படங்களை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/elon-musks-rocket-hits-the-moons-surface-dust-rises-10-feet-high




