செங்கல்பட்டு, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? என்பது குறித்து மரகதம் குமரவேல் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று பிரசாரம் செய்து வருகிறார். சென்னையிலிருந்து சாலை வழியாக மதுராந்தகம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வழியில் அவர் சாலைவலம் மேற்கொண்டு ஆத்தூர் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டரங்குக்கு வந்தடைந்தார். தொடர்ந்து, பிரசார வாகனத்துக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார். அதனை தொடர்ந்து மதுராந்தகம் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசியதாவது:- கை கொடுத்தவர் விஜய் திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தேன். ராஜினாமா செய்துவிட்டதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். நான் பிரசாரம் செய்யும் பகுதிகளில் திமுகவும், அதிமுகவும் என் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அதிமுகவில் இருந்து வெளியே வந்த போது நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். நான் மேலே ஏறும் போது எனக்கு கை கொடுத்து, நான் இருக்கிறேன் என்று சொன்னவர் முதல்-அமைச்சர் விஜய். ஏன் பெட்டி வாங்கப் போகிறேன்? "மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக்கொள்ள வேண்டும், மதுராந்தகத்தின் வளர்ச்சிக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். அதனால்தான் தவெகவில் இணைந்தேன். கொள்கையில் உறுதியாக இருக்கும் விஜய், எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்? நான் ஏன் பெட்டி வாங்கப் போகிறேன்?" தவெகவின் கொள்கையே ஊழலற்ற ஆட்சி என்பதுதான் அப்படி இருக்கும்ப்போது எனக்கு ஏன் பெட்டி கொடுக்க போகிறார். பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா என்னை பார்த்துக் கொள்வீர்களோ இல்லையோ, மதுராந்தகம் தொகுதியை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா. அவர்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் செய்து கொடுக்க வேண்டும் அண்ணா என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-you-leave-aiadmk-and-join-the-tvk-maragatham-kumaravel-explains




