பெங்களூரு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நவம்பர் 24-ந்தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை நடக் கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான தமிழகத்தின் குகேசும், கேண்டி டேட்ஸ் போட்டியில் வெற்றி கண்ட ஜவோகிர் சிந்தாரோவும் (உஸ்பெகிஸ்தான்) மோதுகிறார்கள். பெங்களூருவில் குளோபஸ் செஸ் லீக்கில் பங்கேற்றுள்ள நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே), சிந்தாரோவுக்கு எதிராக குகேஷ் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொள்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என கேட்கப்பட் டது. அதற்கு கார்ல்சென் அளித்த பதில் வருமாறு:- பட்டத்தை தக்கவைத்தல் என்ற வார்த்தையுடன் தொடங்குவது உண்மையிலேயே நல்லதல்ல. ஏனெனில் குகேஷ் கடந்த சில ஆண்டுகளாக விளையாடிய விதத்தை பார்க்கும் போது. அவர் எதையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கக்கூடாது. அவர் எல்லாவற் றையும் பெறும் நிலையிலேயே இருக்க வேண்டும். எல்லாம் சரியாக அமையும் போது மிக உயரிய மட்டத்தில் விளையாடும் ஆற்றல் தனக்கு உண்டு என்பதை 2024-ல் நிரூபித்து காட் டினார். இப்போதும் அவர் அதை செய்வார் (சாம்பியன் பட்டத்தை வெல்வது) என்ற நம் பிக்கை பலரிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் மீண்டும் அந்த நிலைக்கு திரும்ப முயற்சிப்பது அவருக்கு இன்னும் சுவாரசியமான ஒரு சவாலாகும். செஸ் என்பது உளவியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விளையாட்டு. எனவே சிந்தாரோவின் மனதில் சில சந்தேகங்களையும், குகேஷின் மனதில் கொஞ்சம் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கு அதிக முயற்சி தேவைப்படாது. இருப்பினும் தற்போதைய சூழலில் சிந்தாரோவ் தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிந்தாரோவ் முன்னிலை கண்டால், அனேகமாக அது குகேசுக்கு மிகவும் மோசமான செய்தியாக இருக்கும். குகேஷ் தொடக்க சுற்றுகளிலேயே முன்னிலை பெற்றால், அவரே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளவராக மாறிவிடுவார். இத்தகைய போட்டிகள் அப்படி தான் அமையும். இவ்வாறு கார்ல்சென் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/who-has-the-winning-chance-carlsen-answers




