வாஷிங்டன், பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நடந்த 2-வது சுற்று நாக் அவுட் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் கேப் வெர்தே அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் உலக்கோப்பை தொடரில் இருந்து கேப் வெர்தே வெளியேறியது. வெற்றி தொடர்பாக பேசிய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி கூறியதாவது, உண்மையைச் சொல்லப்போனால், இது மிகவும் கடினமான போட்டியாக இருக்கப்போகிறது என்பது எங்களுக்கு முன்பே தெரியும். சில சமயங்களில் பந்தைத் தக்கவைப்பதில் நாங்கள் தடுமாறினோம், இது ஒரு சிக்கலான ஆட்டமாகவே இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதுதான் இந்த உலகக் கோப்பையை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது. எல்லாமே மிக நெருக்கமான போட்டியாக அமைகிறது, மேலும் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் கடினமானதாக இருக்கிறது. எப்போதும் போல, நாங்கள் நன்றாக விளையாடினாலும் சரி அல்லது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் சரி, நாங்கள் முழு முயற்சியையும் கொடுத்தோம். இப்போது மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உடல்நலத்தை மீட்டெடுத்து, அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்தி, இன்றைய ஆட்டத்திலிருந்து நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்வதுதான்.என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/we-gave-it-our-all-argentina-captain-messi




