நெல்லை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) நெல்லை துணை மண்டலம் சார்பில், இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. குறைகளை தெரிவிக்கலாம் முகாமில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இ.எஸ்.ஐ. திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே பயனீட்டாளர்கள் குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி பாஸ்கர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-grievance-redressal-camp-in-nellai-on-the-12th




