சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 6-ந்தேதி(இன்று) முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளில் முக்கிய நோக்கமாகும். பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோர் 06.08.2026 முதல் 31.08.2026 வரை tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவியர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள tncmtrophy.sdat.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ‘’ஆடுகளம்’’ தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-trophy-sports-tournaments-online-registration-begins-today




