லிஸ்பன், நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார். ஓய்வு குறித்து ரொனால்டோ 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடைபெற்ற பிபா உலகக் கோப்பைத் தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனினும், சர்வதேச கால்பந்தில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து ரொனால்டோ இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அடுத்தடுத்து 4 போட்டிகள் இந்நிலையில், நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார். போர்ச்சுகல் அணி தனது நேஷன்ஸ் லீக் தொடரை செப்டம்பர் 24-ம் தேதி சொந்த மண்ணில் வேல்ஸ் அணிக்கு எதிராக தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27-ம் தேதி நார்வே அணியையும், அக்டோபர் 1-ம் தேதி டென்மார்க் அணியையும் எதிர்கொள்கிறது. பின்னர் அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் நார்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது. போர்ச்சுகல் அணி கோல்கீப்பர்கள்: டியோகோ கோஸ்டா, ரூய் சில்வா, சாமுவேல் சோரெஸ். தடுப்பு ஆட்டக்காரர்கள்: கொன்சாலோ இனாசியோ, ஜொவா கான்செலோ, டியோகோ டாலோட், நுனோ தவாரெஸ், நுனோ மென்டெஸ், ரெனாடோ விகா, ரூபன் டயஸ், தோமஸ் அரோஜோ. நடுகள வீரர்கள்: புருனோ பெர்னாண்டஸ், ஜொவா பால்ஹின்ஹா, ஜொவா நெவ்ஸ், ரூபன் நெவ்ஸ், விட்டின்ஹா, பெர்னார்டோ சில்வா. முன்கள வீரர்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ, பேபியோ சில்வா, பிரான்சிஸ்கோ டிரின்காவ், பிரான்சிஸ்கோ கான்செய்சாவ், கொன்சாலோ ராமோஸ், ஜொவா பெலிக்ஸ், பெட்ரோ நெட்டோ, ரபேல் லியோ. ரொனால்டோ தலைமையில் வலுவான அணியுடன் நேஷன்ஸ் லீக் தொடரில் போர்ச்சுகல் களமிறங்குகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/cristiano-ronaldo-named-in-portugal-squad-for-nations-league-fixtures




