சென்னை, காவல் துறையினர் என்னிடம் எழுப்பிய 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன் என அன்பில் மகேஸ் கூறினார். திமுக ஆட்சியில் தனி யார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன் னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியி டம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அன்பில் மகேஷிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. விசாரணையில் பல்வேறு கேள்விகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் அன்பில் மகேஷிடம் 7 மணிநேரத்திற்கு மேலாக நடந்த மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- செப்.16-ம் தேதியன்று எனது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் மத்திய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இன்றைய விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னிடம் 246 கேள்விகள் எழுப்பினர். காவல்துறையினர் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதிலளித்தேன். வழக்கு தொடர்புடைய ஆதாரங்கள் எதுவும் சிக்காத நிலையில் என்னை விசாரணைக்கு அழைத்தனர். கேள்விகள் இன்னும் எஞ்சியிருப்பதால் அடுத்தவாரம் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்புவதாக கூறியுள்ளனர். அரசகுமாரிடம் இதுவரை நான் பேசியதில்லை. இதுசார்ந்து நீங்கள் அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-answered-246-out-of-295-questions-anbil-magesh-interview




