அகமதாபாத், கல்லூரி செல்லும் வழியில் கிரேன் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவி பலி அகமதாபாத்தின் கோட்டா பகுதியில் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவி பிரேர்னா நினமா ( வயது 19) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஹைட்ராலிக் கிரேன் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பின்னர் கிரேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. விசாரணை இது குறித்து தகவல் அறிந்த அகமதாபாத் ‘ஏ’ பிரிவு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோலோ சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கிரேன் ஓட்டுநரை தேடி வந்தனர். கைது இந்நிலையில், தப்பியோடியதாக கூறப்படும் கிரேன் ஓட்டுநர் அருண்குமார் நிஷாத் ( வயது 26) என்பவரை சோலோ பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் நிஷாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/tragedy-on-the-way-to-college-student-dies-after-being-hit-by-hydraulic-crane




