கடலூர், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குரு பிரசாத் (வயது 17). இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். குரு பிரசாத்தின் உறவினரான மகேஷ் என்பவரின் வீடு வரக்கால்பட்டில் உள்ளது. சுவர் இடிந்து விழுந்தது குருபிரசாத், தனது உறவினரான மகேஷின் வீட்டில் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் குருபிரசாத், உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு அவர் தனது பாட்டி மற்றும் உறவினர் மகேஷ் ஆகியோருடன் படுத்து தூங்கினார். குரு பிரசாத் சுவரையொட்டி படுத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை குருபிரசாத் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே தூங்கி கொண்டிருந்த பாட்டி மற்றும் உறவினர் மகேஷ் ஆகியோர் விரைந்து எழுந்து, கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தனர். அப்போது குருபிரசாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wall-collapsed-on-a-sleeping-12th-grader-killing-him




