திருச்சி, எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி வழியாக செல்லும் சில ரெயில்களின் சேவையில் தெற்கு ரெயில்வே மாற்றம் செய்யதுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமி டம் தாமதமாக நெல்லை சென்றடையும். * எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறு நாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும். * தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபு ரம் சென்டிரல் சென்றடையும். * தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்க னூர் சென்றடையும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-works-changes-to-train-services-passing-through-trichy




