Articolo completo
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா.ம.க- வில் பதவி வழங்குவதில் தொடங்கி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதரவு, சுயேச்சை நிலைப்பாடு வரை தந்தையும் மகனும் எதிரெதிர் துருவங்களில் நின்று வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டுக்கிடந்த சூழலில் ராமதாஸ் அணிக்கு பக்கபலமாக நின்றவர் சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அருள். ராமதாஸின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொண்டது மட்டுமில்லாமல், அன்புமணியை கடுமையாக எதிர்த்து பகையை சம்பாதித்தவர். தன்னை கட்சியை விட்டு நீக்கியபோதும், "என்னை நீக்க அன்புமணிக்கோ அவரது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கோ அதிகாரம் இல்லை" என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அன்புமணி ராமதாஸ் தரப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியது, மற்றும் தேர்தல் நேரத்தில் மாற்று அணியாகக் களம் கண்டது போன்ற தீவிரமாக ராமதாஸ் பக்கம் நின்ற இவருக்கு, இந்த இணைப்பு நெருக்கடியான சூழலை உருவாக்கியிருக்கிறது. பா.ம.க அருள் ராமதாஸ் அணி பக்கம் நின்ற பா.ம.க- வைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், " தந்தை மகனின் குடும்ப மற்றும் அரசியல் ரீதியான இந்த திடீர் இணைப்பால் இடையில் நின்று தீவிரமாகப் போராடிய அருள் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கியிருக்கிறார்கள். மீண்டும் அன்புமணி தலைமையின் கீழ் தொடர்வது என்பது கடுமையான மன உளைச்சலையும் இக்கட்டான சூழலையும் உருவாக்கும். அரசியலில் மாற்றுப் பாதையைத் தேடும் கட்டாயப்படுத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அருள்" என்றார். இதனிடையே செய்தியாளர்களிடம், ``" தந்தை மகன் இருவரிடையே நீடித்த வந்த மோதல் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இனி இணைந்து செயல்படுவோம்" என அருள் கருத்து தெரிவித்திருக்கிறார். பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto



