சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் கட்டுமான பணியில் 2 முக்கிய மைல்கல்கள் எட்டப்பட்டுள்ளன. இப்பணியில், பழைய மாமல்லபுரம் சாலையில் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை மொத்தம் 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், மொத்தம் 582 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட யூ-வடிவ கான்கிரீட் தூண் விட்டங்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து அஸ்திவார தூண்கள் பணிகளும், யு-கார்டர் தயாரிப்பு பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ 2-ம் கட்டிடத்தின் 3-வது வழித்தட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க உதவும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதன் மூலம் பழைய மாமல்லபுரம் சாலையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவை விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-installing-foundation-pillars-on-old-mahabalipuram-road-completed-chennai-metro-rail-limited-announces




