டெல்லி, டெல்லியில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டம் உள்ளது. 1917-ம் ஆண்டு சர் எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்த இந்த தோட்டம் இங்கிலாந்து மற்றும் முகலாய பாணிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் பல்வேறு மலர் தோட்டங்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் ஆட்சி காலத்தில், மூலிகை, போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் போன்ற கூடுதல் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஜனாதிபதி மாளிகை தோட்டம் - பொதுமக்களுக்கு அனுமதி இந்த தோட்டம் ஆண்டு தோறும் அவ்வப்போது பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகை தோட்டம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை பார்வையிட்டனர். மாலை 6 மணியுடன் இன்றைய பொதுமக்கள் அனுமதி நிறைவு பெற்றது. இன்று முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை இத்தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் visit.rashtrapatibhavan.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/presidential-palace-garden-open-to-public




