திருவனந்தபுரம், 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடின. லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று முடிவில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்தநிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு அர்ஜெண்டினா -ஸ்பெயின் அணிகள் இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியையொட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் நிலையில், முதல்-மந்திரி சதீசன் அறிவுறுத்தலை அடுத்து கேரள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்குவதால் அதை பார்த்துவிட்டு ஓய்வெடுக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/world-cup-holiday-for-schools-colleges-in-kerala-tomorrow




