திருவனந்தபுரம், சபரிமலையில் அப்பம், அரவணை தயாரிக்கவும் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நெய்யை பயன்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. தரமற்ற நெய் வினியோக மோசடி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அப்பம், அரவணை பிரசாதமாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அப்பம், அரவணை தயாரிக்க அதிக அளவில் நெய் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கடந்த காலங்களில் சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் அளிக்கும் நெய் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. மேலும் தேவைப்படும் காலங்களில் தனியாரிடம் இருந்தும் நெய் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் தனியார் நிறுவனம் சார்பில் வினியோகம் செய்ததில், கலப்படம் கலந்து மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு கேரள அரசின் பால்வள மேம்பாட்டு கழகத்தி டம் (மில்மா) நெய் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதிலும் தரமற்ற நெய் வினியோகம் செய்து ரூ.85% லட்சம் மோசடி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. தேவஸ்தான வாரிய கூட்டம் இதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மில்மா அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் வாரிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் கூறியதாவது:- புதிய முடிவு சபரிமலைக்கு வினியோகம் செய்த நெய்யில் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. இனி சபரிமலையில் பக்தர்கள் வழங்கும் நெய்யை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நெய் கொள்முதலுக்கான மில்மா நிறுவனத்துடன் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/decision-to-prepare-ghee-based-appam-and-aravana-for-offerings-by-devotees-at-sabarimala




