நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டிலேயே அதிக அன்னிய நேரடி முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்துக்கு 595 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இந்த காலகட்டத்தில் மொத்த அன்னிய நேரடி முதலீடு 1,981 கோடி டாலராக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 6 சதவீதம் அதிகமாகும். மாநிலங்கள் அடிப்படையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 30 சதவீதத்தை தமிழகம் பெற்றுள்ளது. நிதி, வங்கி, காப்பீடு, வணிகம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைத் துறையில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனமான MUFG இடமிருந்து, தமிழகத்தின் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்த பெரும் முதலீடே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மராட்டியம் 2-ஆம் இடம் அதற்கு அடுத்தபடியாக மராட்டியம் 422 கோடி டாலர், டெல்லி 267 கோடி டாலர், கர்நாடகம் 211 கோடி டாலர் மற்றும் குஜராத் 130 கோடி டாலர் முதலீட்டை பெற்றுள்ளன.துறைவாரியாக சேவைத் துறை அதிகபட்சமாக 704 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது. கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் 284 கோடி டாலரும், வர்த்தகத் துறையில் 192 கோடி டாலரும், மரபுசாரா எரிசக்தி துறையில் 124 கோடி டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் அதிக முதலீடு செய்த நாடாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜப்பானில் இருந்து 571 கோடி டாலரும், சிங்கப்பூரில் இருந்து 522 கோடி டாலரும், மொரீஷியஸில் இருந்து 231 கோடி டாலரும் முதலீடு வந்துள்ளன. மறுமுதலீடு மற்றும் பிற முதலீடுகள் உள்ளிட்ட மொத்த அன்னிய முதலீடு முதல் காலாண்டில் 3,065 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/states-attracting-the-most-foreign-direct-investment-tamil-nadu-takes-the-top-spot




