ISRO-வில் கிடைத்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கும் முடிவை எடுத்த ஐ.ஐ.டி பாம்பே முன்னாள் மாணவர் மனோஜ் குமார் மீனா, இன்று ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அவருடன் சிபப்ரதா தாஸும் இணைந்து கட்டமைத்த இந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை, இன்றைய ஸ்டார்ட்அப் உலகத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ISRO முதல் இன்குபேட்டர் வரை ராஜஸ்தானைச் சேர்ந்த மனோஜ் மீனா, ஐ.ஐ.டி பாம்பேவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். படித்து முடித்ததும் ISRO-வில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சொந்தமாகத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கும் ஆர்வம் அவருக்கு இருந்ததால், அந்த வாய்ப்பைத் தவிர்க்க முடிவு செய்தார். அதன்படி, 2012-ல் ஐ.ஐ.டி பாம்பேயின் 'SINE' இன்குபேட்டர் மூலம் 'ஆட்டம்பெர்க் ' (Atomberg) தொடங்கப்பட்டது. மனோஜ் மீனா அடுத்த ஆண்டில் அவருடன் சிபப்ரதா தாஸ் இணைந்தார். ஐ.ஐ.டி பாம்பேவில் சிவில் இன்ஜினீயரிங் படித்த தாஸ், கல்லூரி காலத்திலிருந்தே இ-காமர்ஸ் முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவர். நிறுவனத்தின் தொழில்நுட்பப் பணிகளை மனோஜ் கவனித்துக் கொள்ள, பிசினஸ் வியூகம், பிராண்ட் உருவாக்கம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிப் பணிகளை தாஸ் முன்னெடுத்துச் சென்றார். பல கட்டத் திணறல்களும், திருப்புமுனையும் ஆரம்பத்தில் ஆட்டம்பெர்க் ஒரு நுகர்வோர் உபயோகப் பொருள் நிறுவனமாகச் செயல்படவில்லை. தரவு சேகரிப்பு அமைப்பு, வெகிக்கில் டிராக்கிங் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் திட்டங்களில்தான் கவனம் செலுத்தியது. ஐ.ஐ.டி., டி.ஆர்.டி.ஓ., பார்க் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு புராஜெக்ட்டுகள் செய்து கொடுத்தாலும், இந்தத் துறையை பெரிய அளவில் விரிவுபடுத்துவது கடினம் என்பதை நிறுவனர்கள் உணர்ந்தனர். இதையடுத்து, 2015-ல் 'சீலிங் ஃபேன்' சந்தைக்கு மாறினர். வழக்கமான இன்டக்ஷன்-மோட்டார் மின்விசிறிகள் 70 முதல் 80 வாட்ஸ் வரை மின்சாரத்தைப் பயன்படுத்திய நிலையில், இவர்கள் உருவாக்கிய BLDC மின்விசிறிகள் சுமார் 28 வாட்ஸில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது மின்சாரச் செலவைக் குறைப்பதோடு, ஸ்மார்ட் கன்ட்ரோல்ஸ் போன்ற அம்சங்களையும் வழங்கியது. சந்தையை அணுகிய விதம் அதிக விலை கொண்ட இந்தப் புதிய மின்விசிறியை நேரடியாகச் சந்தையில் விற்பனை செய்வது சவாலாக இருந்தது. எனவே, ஆரம்பத்தில் பி2பி முறையைப் பயன்படுத்தினர். டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து, 'டிமாண்ட் சைடு மேனேஜ்மென்ட்' திட்டங்கள் மூலம் வணிக வளாகங்களுக்கு எனர்ஜி-சேவிங் பேன்களைக் கொண்டு சேர்த்தனர். அதன் பிறகு அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் மூலம் நேரடியாக நுகர்வோரை அடைந்தனர். மின்சார மிச்சத்தைக் கணக்கிட்டுக் காட்டி, வாடிக்கையாளர்களுக்கு அதன் பலனை விளக்கினர். இதன் தொடர்ச்சியாக 2018-ல் ஆஃப்லைன் சில்லறை விற்பனைக்கும் விரிவுபடுத்தினர். தற்போது டிஸ்ட்ரிபியூட்டர்கள், ரீடெய்ல் ஸ்டோர்கள், இ-காமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. மார்ச் 2026 நிலவரப்படி, நிறுவனத்துக்கு 46,932 ரீடெய்ல் டச் பாயிண்ட்களும், சுமார் 626 டிஸ்ட்ரிபியூட்டர்களும் இருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் கோடியைக் கடந்த பயணம் சீலிங் ஃபேனில் தொடங்கிய பயணம், தற்போது மிக்ஸர் கிரைண்டர்கள், கிச்சன் அப்ளையன்சுகள், வாட்டர் பியூரிபையர்கள், ஸ்மார்ட் லாக்குகள் என விரிவடைந்துள்ளது. கடந்த 2025 நிதியாண்டில் ரூ.959.51 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய், 2026 நிதியாண்டில் இயக்க வருவாயாக ரூ.1,293.77 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, 2026 ஆகஸ்ட் 21 அன்று செபியிடம் இதற்கான வரைவு ஆவணங்களை இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இதில் ரூ.450 கோடி வரை புதிய பங்குகள் வெளியீடு (Fresh Issue) மற்றும் 7.65 கோடி பங்குகள் வரை ஆஃபர் ஃபார் சேல் இடம்பெற உள்ளன. ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, ஆரம்பக் காலச் சவால்களைக் கடந்து, சந்தைக்கு ஏற்றார்போல் தங்களை மாற்றிக் கொண்டு இன்று ஐ.பி.ஓ. வரை வந்து நிற்கிறது ஆட்டம்பெர்க்கின் பிசினஸ் பயணம். தயிர்பாளையம் to பங்குச் சந்தை. MilkyMist-ன் அசாதாரண பயணம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/business/from-isro-offer-to-1000-crore-company-atombergs-journey




