புதுடெல்லி, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 19.63 சதவீதம் அதிகரித்து, ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 94 கோடியாக (44.24 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள், மின்னணு சாதனங்கள், என்ஜினீயரிங் மற்றும் கடல் சார் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு இதற்கு முக்கிய காரணமாகும். அதே சமயம் கச்சா எண்ணெய் இறக்குமதி 17.64 சதவீதம் உயர்ந்ததால், நாட்டின் ஒட்டு மொத்த இறக்குமதி 17.52 சதவீதம் அதிகரித்து ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 215 கோடியாக (76.22 பில்லியன் டாலர்) உயர்ந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை ரூ.3 லட்சம் கோடியாக (31.98 பில்லியன் டாலர்) உயர்ந்து, கடந்த 6 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/indias-trade-deficit-rises-to-rs-3-lakh-crore




