திண்டுக்கல், திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மனைவி செல்வி. இவர்க ளது மகள் ராஜபிரியா (வயது 23). இவர் எம்.டெக். பட்டதாரி. இவரும் வையாளிபட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன் மகன் பாலமுருகன் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் ராஜபிரியாவின் வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலில் திருமணம் அதனை பொருட்படுத்தாத ராஜபிரியா வீட்டை விட்டு வெளியேறி பாலமுருகனுடன் சென்று விட்டார். இவர்கள் 2 பேரும் மதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக இருவரது பெற்றோர்களை யும் வர வைத்தனர். அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ராஜ பிரியாவின் பெற்றோர் தங்களது மகள் காதல் கணவனுடன் இருப்பதை பார்த்ததும் கதறி அழுதனர். படிக்க வைத்து ஆளாக்கி அழகு பார்த்த எங்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்து விட்டாயே எனக் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது அவர்கள் தங்களது மகளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு ராஜ பிரியா மறுத்துவிட்டார். பெற்றோருடன் செல்ல மறுப்பு இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை ராமச்சந்திரன், தாய் செல்வி மகள் என்றும் பாராமல் ராஜபிரியாவின் காலை பிடித்து எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு என்று கெஞ்சியபடி கதறி அழுதக் காட்சி அங்கே இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இதையடுத்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ராஜ பிரியாவின் விருப்ப த்தின் பேரில் அவரது கணவன் பாலமுருகனுடன் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து ராமச்சந்திரன், மனைவி செல்வி மற்றும் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-protest-near-dindigul-a-young-woman-who-left-her-parents-and-went-with-her-lover




