இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினை, பேட்டரி விரைவாக தீர்ந்து விடுவதுதான். சில எளிய அமைப்புகளை மாற்றுவதன் மூலம் பேட்டரி ஆயுளை அதிகரிக்கலாம். பின்னணியில் (Background) தொடர்ந்து இயங்கும் தேவையற்ற செயலிகள் அதிகளவில் பேட்டரியை பயன்படுத்துகின்றன. எனவே Settings-ல் சென்று பயன்படுத்தாத செயலிகளை Force Stop செய்யவோ அல்லது தேவையற்றவற்றை நீக்கவோலாம். Settings-இல் உள்ள Battery Usage பகுதியை அவ்வப்போது சரிபார்க்கவும். எந்த செயலி அதிக பேட்டரியை பயன்படுத்துகிறது என்பதை அறிந்து, தேவையெனில் அதன் பின்னணி செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம். திரையின் Brightness அளவை குறைத்து பயன்படுத்துவது பேட்டரி சேமிப்பதற்கான மிகவும் எளிய வழிகளில் ஒன்றாகும். தேவையெனில் Auto Brightness வசதியையும் பயன்படுத்தலாம். பேட்டரி குறைவாக இருக்கும் நேரங்களில் Battery Saver அல்லது Power Saving Mode-ஐ இயக்குங்கள். இது தேவையற்ற பின்னணி செயல்பாடுகளை குறைத்து பேட்டரி நீண்ட நேரம் நீடிக்க உதவும். பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் Location (GPS), Bluetooth மற்றும் Wi-Fi ஆகியவற்றை அணைத்து வைப்பது பேட்டரி பயன்பாட்டை கணிசமாகக் குறைக்கும். இணையம் தேவையில்லாத நேரங்களில் Mobile Data-வை அணைத்து வைக்கவும். இதனால் பேட்டரி மட்டுமல்லாமல், மொபைல் டேட்டாவும் சேமிக்கப்படும். தொலைபேசியைப் பயன்படுத்தாத நேரங்களில் அல்லது சிக்னல் இல்லாத இடங்களில் Flight Mode-ஐ இயக்கலாம். இது நெட்வொர்க் தேடுவதற்காக செலவாகும் பேட்டரி பயன்பாட்டை குறைத்து, நீண்ட நேரம் சார்ஜ் நீடிக்க உதவும். நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/8-simple-tips-to-make-your-smartphone-battery-last-longerஸ்மார்ட்போன்-பேட்டரியை-நீண்ட-நேரம்-பயன்படுத்த-8-எளிய-டிப்ஸ்




