"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்தார். அதில், ``என் பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" எனத் தெரிவித்திருந்தார். நயினார் நாகேந்திரன் இந்த விளக்கத்தை ஏற்காத தவெக அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், அமைச்சர் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்! ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரன் அவர்களே." எனக் குறிப்பிட்டிருக்கிறார். "தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது எதிர்ப்பதற்கு?" - அமைச்சர் ரமேஷ் கிண்டல் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/ministers-are-condemning-nainar-nagendrans-remarks



