சென்னை, சென்னையில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையை மேம்படுத்தவும். தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழ் இலக்கியங்களை மதிப்பெண்களுக்காக மட்டுமே மனப்பாடம் செய்தால் போதும் என்கிற எண்ணத்தை மாற்றி மாணவர்களை பண்படுத்தவும் ஏற்றமொழி தமிழ் என்பதை கல்லூரி மாணவர்கள் அறியும் வண்ணம் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு பயிற்சி சென்னையில் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இன்று (25.09.2026) நடைபெற்ற இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. "இளந்தமிழும் இளைய தலைமுறையும்" என்ற தலைப்பில் தமிழ்மாமணி மதுரை இராமகிருஷ்ணன், "வாழ்வியலும் இலக்கியமும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் ராஜாராமன், "வெற்றிக்களம் கண்ட வீரத்தமிழ்ப்பெண்கள்" என்ற தலைப்பில் முனைவர் வே. ஸ்ரீலதா, "தமிழிலக்கியத்தில் அடையாள மீட்டுருவாக்கம்" என்ற தலைப்பில் எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ், "பாதுகாப்பான செய்யறிவு (AT) சமூகம் அமைப்பது எப்படி" என்ற தலைப்பில் சைபர் சிம்மன், "சங்ககாலத்தில் வாழ்வியல் கோட்பாடுகள்" என்ற தலைப்பில் அனுகிரகா ஆதிபகவன் ஆகியோர் பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்ட 100 மாணவிகளுக்கு பயிற்சி அளித்து உள்ளனர். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் ராஜாராமன் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-literature-training-camp-in-chennai-minister-rajmohan-inaugurates




