சென்னை, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை குறைந்தது. காலையில் சவரனுக்கு ரூ.560-ம், பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று காலையிலும் தங்கம் விலை குறைந்தது. சவரனுக்கு ரூ.600-ம், கிராமுக்கு ரூ.75-ம் குறைந்து ஒரு சவரன் 1,17,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-in-morning-surges-in-evening-whats-the-status




