காத்மாண்டு, நம்ப முடியாத அளவில் பலி எண்ணிக்கை இருக்கும் என நேபாளத்தின் முன்னாள் வன மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மாதவ் பிரசாத் சவுலாகைன் கூறியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பெரும் பேரழிவை உண்டாக்கி இருக்கிறது. திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் லேண்டே கோலா ஆறு, நேபாளம் - திபெத் எல்லை பகுதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் உள்ள ரசுவாகடி பகுதியை அடைகிறது. அதன்பின் சிறு ஆடைகளுடன் இணைந்து ரசுவாகடி பகுதியில் போடே கோஷி ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே நேற்று இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக லெண்டே கோலா அற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேபாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்தது. பாறைகள், மண் உள்ளிட்டவைகளுடன் சுமார் 30 அடி உயரத்துக்கு சீறி வந்த காட்டாற்று வெள்ளம் நேபாளத்தின் சசுவா, தாடிங் ஆகிய மாவட்டங்களில் போடே கோஷி ஆற்றில் நுழைந்தது. அந்த ஆற்றின் வழியாக திரிசூலி ஆற்றில் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் இந்த வெள்ளம் நுவாகோட், சித்வாம், கோர்கா, தனஹி, நவல்ப்ப்ராசி கிழக்கு போன்ற மாவட்டங்களில் உள்ள ஆற்றின் வழித்தடத்தில் கட்டுக்கடங்காமல் சென்றது. இதில் ஆறுகளின் பாதையில் இருந்த கிராமங்கள்- நகரங்களை இந்த வெள்ளம் கடுமையாக தாக்கியது. வீடுகள் பெரிய கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மின் நிலையங்கள் அடித்து செல்லப்பட்டன. காட்டாற்று வெள்ளத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து நேபாள ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட மீட்புக்குழுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காட்டாற்று வெள்ளம் பாய்ந்த இடங்களில் சேறு சகதிகளுமாக காணப்படுகிறது. இதில் பலர் பிணமாக மிட்கப்பட்டனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். பலி எண்ணிக்கை நம்ப முடியாத அளவிற்கு உயரக்கூடும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், நேபாளத்திற்கும் சீனாவுக்கும் இடையே சரியான நேரத்தில் தகவல்கள் பரிமாறப்படாதது கவலைக்குரியது. இந்தப் பேரிடரின் அளவு மிகப்பெரியது என்பதால், பலி எண்ணிக்கை நம்ப முடியாத அளவிற்கு உயரக்கூடும் என நேபாளத்தின் முன்னாள் வன மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மாதவ் பிரசாத் சவுலாகைன் கூறியுள்ளார். இதனிடையே, நேபாள வெள்ளத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். முன்னால் சென்ற 2 பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. காட்டாற்று வெள்ளம்போல வந்து மொத்தமாக அடித்து சென்றது. எங்களுக்கு முன்பும் பின்பும் இருந்த வாகனம் அடித்து செல்லப்பட்டது. மொத்தமாக 60 பேர் சென்றோம், அதில் 21 பேர் தப்பினோம், மற்றவர்கள் மாயம் ஆகி உள்ளனர் என நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட தமிழர் தந்தி டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/death-toll-is-unbelievable-former-nepali-minister-reports




