திருவனந்தபுரம், கேரளாவில் 9 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். ரெட் அலர்ட் இந்நிலையில், கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/heavy-rain-in-kerala-red-alert-for-9-districts




