புதுடெல்லி, உலகளவில், மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் இரண்டாவது பெரிய நாடாக, நம் நாடு விரைவில் உருவெடுக்க உள்ளது. சர்வதேச அளவில், மெட்ரோ ரயில் நெட் வொர்க்கில், நம் அண்டை நாடான சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு, 11,000 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் வழித்தடம் உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடி யாக, 1,386 கி.மீ., மெட்ரோ ரயில் நெட்வொர்க்குடன், அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. 1,170 கி.மீ. மெட்ரோ ரயில் வழித் தடத் துடன், நம் நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. நாட்டின், 26 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அமெரிக்காவை விட வெறும். 216 கி.மீ., மட்டுமே நம் நாடு பின் தங்கி உள்ளது. கடந்த 2014, ஐந்து நகரங்களில் வெறும், 245 கி.மீ., ஆக இருந்த மெட்ரோ ரயில் நெட்வொர்க், தற்போது, 1,170 கி.மீ., ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் தற்போது, 900 கி.மீ.,துாரத்துக்கு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதில் ஒரு சிறிய பகுதி செயல்பாட்டுக்கு வந்தாலே, அமெரிக்காவை நம் நாடு எளிதில் விஞ்சி இரண்டாம் இடத்தை பிடித்து விடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/metro-rail-service-india-set-to-overtake-the-us-and-secure-second-place




