சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறர். அந்த வகையில் இன்று புதுக்கோடையை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது; துரோகிகள் தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியான த.வெ.க. பக்கம் சென்றுள்ள துரோகிகள் பற்றி கவலைப்பட வேண்டாம். உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக களப்பணியாற்றுங்கள். கட்சிக்கு விசுவாசம் மிக்க இளைஞர்கள், பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். விராலிமலை தொகுதி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். விராலிமலை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற டாக்டர் சி.விஜயபாஸ்கர் கட்சிக்கு துரோகம் இளைத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துள்ளார். விராலிமலை தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும். துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது. எனவே, ஒரு நல்ல வேட்பாளரை நீங்களே தேர்வு செய்துவிட்டு வாருங்கள் என்று தெரிவித்து உள்ளார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/traitors-must-not-be-allowed-to-win-the-viralimalai-by-election-edappadi-palaniswami




