ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் ஏற்பட்டது. பிரபல வணிகப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற் றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக நாடுகளின் அழுத்தத்தால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி மத்தியஸ்த நாடுகளின் உதவியுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனிடையே இம்மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளை மீறி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. திடீர் தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களுக்கு தற்காலிகமாக தடை விதித்தநிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது ஈரான் மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி அதற்கான ஆதாரத்தை சமர்பித்தார். இருப்பினும் பேச்சுவார்த்தை மூலமாகவே போரை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியுடன் இருப்ப தாக டிரம்ப் தெரிவித்தார்.வெள்ளை மாளிகையில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் அமெரிக்கா ராணுவப்படைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க மத்திய கட்ட ளைக்கு சொந்தமான போர்க்கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 20 பயங்கரவாதிகள் சாவு ஈரான் வீசிய ஏவுகணைகளை வானிலேயே தகர்த்தெறிந்ததாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்தது. ஜோர்டான், சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க போர்ப்படைத்தளங்களை குறி வைத்து ஈரான் தாக்கியது. இதனை டிரோன்கள் வீசி நடுவானில் தகர்க்கப்பட்டன. இதற்கிடையே ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.அமெரிக்காவின் உதவியுடன் இதற்கு சவுதி ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் 20 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை டிரம்ப் நிறுத்திய பின்னர், அமெரிக்க ராணுவத்தளம் மீது ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இதனால் வளைகுடா நாடு களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார். எண்ணெய் சந்தை டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்த சில மணி நேரங்களில், ஈரானில் புதிய வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தனது இறையாண்மைக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் தக்க பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோதல் சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் பிராந்திய பாதுகாப்பில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/us-launches-another-severe-attack-on-iran




